தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

கனடாவின் குடியுரிமை கட்டுப்பாடுகளில் தளர்வு ; வெளியான மகிழ்ச்சி தகவல்

  1. Home
  2. வரலாறு
  3. Eius in voluptatem doloremque nihil.

கனடாவின் குடியுரிமை கட்டுப்பாடுகளில் தளர்வு ; வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடா மக்கள், அந்நாட்டை தவிர வேறு நாடுகளில் குழந்தையை பெற்றால், முதல் தலைமுறை குழந்தைக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இரண்டாவது தலைமுறை குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் அனைத்து தலைமுறை குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்கும் வகையில் தற்போது அந்நாட்டு அரசு, சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கான மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கனடாவின் குடியுரிமை பெற்றவர்கள், வெளிநாட்டில் குழந்தையை பெற்றெடுத்தாலும், அக்குழந்தைக்கு கனடாவின் குடியுரிமை கிடைக்கும்.

ஆனால், இந்த குழந்தை கனடாவின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் வளர்ந்து திருமணமாகி, வெளிநாட்டில் குழந்தையை பெற்றால், அதாவது இரண்டாவது தலைமுறை குழந்தைக்கு கனடா குடியுரிமையை கோர முடியாது என்று சட்டம் இருந்தது.]

இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது இந்த சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அதன்படி இனி எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் கனடாவின் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சட்டத்திருத்தம் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழிப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திருத்தத்திற்கு இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டை சேர்ந்த மக்களும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments