தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

டிரம்ப் மீதான குற்றசாட்டுகளால் அதிரும் அமெரிக்கா; கொழுத்திப்போட்ட எலான் மாஸ்க்!

  1. Home
  2. வரலாறு
  3. Eius in voluptatem doloremque nihil.

டிரம்ப் மீதான குற்றசாட்டுகளால் அதிரும் அமெரிக்கா; கொழுத்திப்போட்ட எலான் மாஸ்க்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் தொடங்கியுள்ள நிலையில் எலான் மஸ்க் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிக்கு பக்கத்துணையாக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்க பாராளுமன்றத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட அரசு பொறுப்புகளில் இருந்து விலகிய எலான் மஸ்க் இனி தனது நிறுவன வளர்ச்சிக்காக மட்டும் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

அதுபோல ட்ரம்ப்பை தேர்தலில் வெற்றி பெற வைத்ததே நான் தான் என எலான் மஸ்க் கூரியுள்ளார். அதோடு அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் வழக்கில் (Epstein Files) ட்ரம்ப்க்கும் தொடர்பு உள்ளதாக எலான் மாஸ்க் கூறிய தகவல் தற்போது அமெரிக்க அரசியலை ஆட்டம் காண வைத்துள்ளது.

அமெரிக்க நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறை சென்றார். அங்கு 2019ம் ஆண்டில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்த நிலையில் இந்த மரணம் மர்மமாக தொடர்கிறது.

இந்நிலையில் தற்போது ட்ரம்ப் மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ள மஸ்க், எப்ஸ்டீன் ஃபைல்ஸில் அதிபர் ட்ரம்ப்பின் பெயரும் உள்ளதாகவும், அதனால்தான் அதை அவர் வெளியிட மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments