தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

3,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ விபத்து!

  1. Home
  2. வரலாறு
  3. Eius in voluptatem doloremque nihil.

3,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ விபத்து!

அலாஸ்காவின் அலூடியன் தீவுகளுக்கு அருகில் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று வியாழக்கிழமை (05) தீ விபத்துக்கு உள்ளானது. இதனால், அதிலிருந்த 22 பணியாளர்கள் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கப்பலில் ஏற்பட்ட தீயானது இன்னும் புகைந்து கொண்டிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

600 அடி உயரமுள்ள மார்னிங் மிடாஸ் (Morning Midas) என்ற கப்பலில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

அவர்கள் ஒரு உயிர் காக்கும் படகில் ஏறி, அடாக் தீவிலிருந்து தென்மேற்கே சுமார் 300 மைல்கள் தொலைவிலும், ஆங்கரேஜுக்கு மேற்கே 1,200 மைல்கள் தொலைவிலும் உள்ள கிரேக்க வணிகக் கப்பலான காஸ்கோ ஹெல்லாஸால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கடலோர காவல்படை புகைப்படங்கள் மற்றும் கப்பலின் மேலாண்மை நிறுவனமான சோடியாக் மேரிடைமின் அறிக்கை, மின்சார வாகனங்கள் நிரப்பப்பட்ட தளத்திலிருந்து கப்பலின் பின்புறத்தில் ஒரு பெரிய புகை மூட்டம் ஆரம்பத்தில் காணப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments