தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

முதலாவது ஆண்டு நிறைவையொட்டி தாய்நிலம் கல்விக்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்

  1. Home
  2. மரண அறித்தல்
  3. அமரர் சின்னப்பொடி சங்கரதாச

முதலாவது ஆண்டு நிறைவையொட்டி தாய்நிலம் கல்விக்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்

தாய்நிலம் கல்விக்கூடத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி தாய்நிலம் கல்விக்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்.
இந் நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சங்கக்குழு, பெற்றோர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து முதலாம் ஆண்டு நிகழ்வை அணிச்சல் (கேக்) வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.
இந் நிகழ்வின் சிறப்பம்சமாக இலவச நடன வகுப்பும் சம்பிரதாயபூர்வமாக நடன ஆசிரியர் கலாவித்தகர் நுண்கலைமாமணி றஜேந்தினி இராசேந்திரன் அவர்களால் சிறப்பாக ஆரம்பித்து வைத்தமையானது மேலும் சிறப்பாக அமைந்தது. பல மாணவர்கள் ஆர்வத்துடன் இணைந்துள்ளதோடு, இந் நிகழ்வை பெற்றோர் சங்கத் தலைவி திருமதி விஜயகுமார் தர்மினி அவர்களால் மிகவும் நேர்த்தியாக நிகழ்த்தப்பட்டது.
மேலும் கல்விக்கூடத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எமது உறவுகளுக்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு கல்விக் கூடத்துக்கு தொடர்ந்தும் சகலவழிகளிலும் பங்களிப்புச் செய்யும் எமது மக்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்தும் நமது மாணவர்களுக்கான கல்வியை மிக சிறப்பாக முன்னெடுக்க அனைவரும் தொடர்ந்தும் உங்கள் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.
இன்றைய நிகழ்வு சிறப்பாகவும் மகிழ்வாகவும் அமைய அணிச்சல், மற்றும் சிற்றுண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய கு.வசி அவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தாய்நிலம் எங்கள் கிராமம்
நன்றி
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments