தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

வைத்தியர் திரு.மார்க்கண்டு திருக்குமரன் – உரும்பிராய் மேற்க்கு

  1. Home
  2. ராம கிருஸ்ணா மகாவித்தியாலயம்
  3. யா/ கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வித்தியாலயத்தின் வரலாற்றுச் சுவடுகள்

வைத்தியர் திரு.மார்க்கண்டு திருக்குமரன் – உரும்பிராய் மேற்க்கு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள்

பிரசவித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

குழந்தைகள் விசேட பராமரிப்பு பிரிவில் உள்ளதாக பிரதிப்பணிப்பாளர் மருத்துவ நிர்வாகி மைதிலி பாக்லட் தெரிவித்தார். மகப்பேற்று மருத்துவ பிரிவின் 5ம் விடுதியில் தனது பராமரிப்பே குழந்தை பிரசவம் எனவும் முதலாவது பிரசவம் எனவும் மகப்பேற்று வைத்திய சிரேஸ்ட நிபுணர் பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் தெரிவித்தார்.

திருமணம் முடித்து 8 வருடங்களின் பின் ஒரே பிரசவத்தில் 5 ஆண் செல்வங்கள்!

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றுத் திங்கட்கிழமை (26.02.2026) ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ளார்.

வைத்தியர் திரு.மார்க்கண்டு திருக்குமரன் – உரும்பிராய் மேற்க்கு

கிரான்குளத்தை சேர்ந்த சிவா மனோஜினி தம்பதியினர் திருமணம் முடித்து 8 வருடங்களின் பின்னர் ஒரே தடவையில் குறித்த தம்பதியினருக்கு இந்த அரிய பேறு கிடைத்திருக்கிறது. குழந்தைகளும், தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான பல குழந்தைகள் கொண்ட பிரசவங்கள் சிக்கலானவை என்பதால் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தாதியர்களின் விசேட கவனிப்பில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேற்படி மகப்பேற்றில் வெற்றிகரமாகச் சாதித்த கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் துறைப் பேராசிரியரும், வைத்திய நிபுணருமான மார்க்கண்டு திருக்குமார் குழுவினருக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தமை இதுவே முதல்முறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments