எமது கிராமத்தை சேர்ந்த புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் சுவீஸ் ஒன்றியத்தினூடாக எமக்கு அளிக்கபட்ட நிதி உதவியை கொண்டு இளைஞர் சனசமூக நிலையத்தினரால் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை (கொரோணா வைரஸ் தாக்கம்) காரணமாக தொடர் ஊரடங்கு சட்டத்தினால் வேலை வாய்ப்புகளை இழந்த சூழல் நிலவுவதால் எமது கிராமத்தில் வாழும் அனைத்து குடும்பங்களுக்குமான அத்தியவசிய உலர் உணவு பொதிகள் 01.04.2020 இன்றைய தினம் காலை 9.00 க்கு வழங்கி வைக்கப்பட்டது.
புலம் பெயர் தேசங்களிலும் தற்போது நெருகடியான சூழல் நிலவுகின்ற போதிலும் எமது கிராம உறவுகளின் உணவு தேவையை கருதி நிதி ஒத்துழைப்பை வழங்கிய புலம் பெயர் தேசத்து உறவுகள் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பாக இளைஞர் சனசமூக நிலையத்தினரின் மனமார்நன்றிகள்.
(இது விளம்பரம் அல்ல இன்னோருவரது பின்பற்றலுக்காக நீங்களும் உதவலாம் என்பதற்காக பதிவிடப்படுகிறது. பணம் தந்தவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும் உதவி செய்பவர்கள் யாரும் இருப்பின் உதவி செய்வதற்காகவும் மட்டுமே புகைபடங்கள் இணைகப்பட்டுள்ளன)












