கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் மரநடுகை
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (25.11.2021) மரநடுகை இடம்பெற்றது. வித்தியாலயத்தின் அதிபர் திரு. க. தவசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம் மரநடுகையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு மரநடுகையிலும் ஈடுபட்டார். உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் அனுசரணையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.










