15.10.25 அன்று தாய் நிலம் கல்விக்கூடத்தில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான சந்திப்பில் கிராம சேவையாளர் தர்ஷி
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் நேற்றைய தினம் 15.10.25 அன்று தாய் நிலம் கல்விக்கூடத்தில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான சந்திப்பில் கிராம சேவையாளர் தர்ஷி அவர்களும், தாயக நிர்வாக உறுப்பினர்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தாய்நிலம் நிர்வாக உறுப்பினர்கள், கல்வி பொறுப்பாளர்கள், நிர்வாக பொறுப்பாளர்கள், நிதி பொறுப்பாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டு பெற்றோர்களுடன் நேரடி Zoom ஊடாக சந்திப்பை நடத்தி உள்ளார்கள்.
இச் சந்திப்பில் மாணவர்களின் எதிர்காலம் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் மிக ஆரோக்கியமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன இதில் முக்கியமாக விடையமாக மண்டபம் நிறைந்த பெற்றோர்கள், மாணவர்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஒரு எதிர்கால சந்ததியின் கல்விக்காக அனைவரும் இணைந்து ஒரு ஆரோக்கியமான சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது
அனைத்து புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் இந்த கல்விக்கூடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை பாராட்டுக்குரியது !
தாய் நிலம் எங்கள் கிராமம் ஊடக பிரிவின் ஊடாக இந்த செய்தியை தெரியப்படுத்துகின்றோம்.
நன்றி வணக்கம்
தொடர்ந்தும் நாங்கள் பயணிப்போம் !
















