தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

பிரித்தானியா நிர்வாக சபை 2025

  1. Home
  2. மரண அறித்தல்
  3. அமரர் வல்லி நவரத்தினம் (நாடக எழுத்தாளர்)

பிரித்தானியா நிர்வாக சபை 2025

பிரித்தானியா நிர்வாக சபை 2025

திகதி 06.02.25 புத்தாண்டும் புதுநிமிர்வும். அறிக்கை     இல.001

இவ்விழாவானது பிரித்தானியாவில் வாழும் கோண்டாவில் வடக்கு மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு எமது கிராம மக்கள் அனைவரும்; ஒன்று சேர்ந்து விழாவைச் சிறப்பித்தனர். ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீர்களையும் மக்களையும் குறிப்பாக எமது கிராமத்தின் முன்னோர்களையும் நினைவு கூர்ந்து மக்கள் எல்லோராலும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து வரவேற்புரை வாசிக்கப்பட்டு பின்பு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடை பெற்றது.

அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நிர்வாகசபை தேர்வு இடம்பெற்றது. மக்களில் சிலர் முன்மொழிய பலர் ஆமோதிக்கும் வகையில் சிலர் வழிமொழிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் என முக்கியமான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டது. இந்த நிர்வாகமானது சரியான முறையில் கொண்டு செல்வதற்காக சில சட்டதிட்டத்தினை யாப்பு வடிவில் உருவாக்கம் செய்து பொது மக்களுக்கு அந்த யாப்பில் அடங்கியுள்ள விடையங்களை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு எமது கிராம மக்களின் அனுமதி பெற்ற பின்பு அந்த யாப்பானது புதிதாக பதவி ஏற்ற தலைவரிடம் கையளிக்கப்பட்டது. அடுத்து புதிதாக பதவி ஏற்ற தலைவர் மக்கள் முன் உரையாற்றினார். அடுத்து வருகைதந்த அனைவருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் உதவிவழங்கிய அனைவருக்கும் புதிதாக பதவி ஏற்ற செயலாளர் நன்றி உரையினை வழங்கினார். எமது புத்;தாண்டும் புதுநிமிர்வும் என்ற பொங்கல் விழாவானது மனநிறைவுடன் இனிதே நிறைவடைந்தது. நிர்வாகசபை உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகசபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்

தலைவர்: கயிலாயப்பிள்ளை குபேரகுலசிங்கம்.
உபதலைவர:; தேசிங்கம் மோகன்
செயலாளர்: கிருஸ்னன் கிருபாகரன்
உபசெயலாளர்: சுந்தரலிங்கம் பிரபாகரன்
பொருளாளர்: நடராஜா சுகீர்தராஜ்
உபபொருளாளர்: சின்னத்தம்பி பத்மநாதன்
1 நிர்வாக உறுப்பினர்கள்: பொன்னுத்துரை கீதராஜன்
2 நிர்வாக உறுப்பினர்கள்: பாலசிங்கம் அன்பழகன்
3 நிர்வாக உறுப்பினர்கள்: கோவிந்தன் உதயரங்கன்

செயற்குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்

நலன்புரி குழு இணைப்பாளர்கள்
பாலசிங்கம் சுபாஸ்கரன், நடராசா பிரபாகரன், தர்மகுலசிங்கம் கார்த்தீபன்
கலை கலாச்சாரக் குழு இணைப்பாளர்கள்:
குமாரசுவாமி உதயரூபன், தேவராசா கஜேந்திரன, சின்னராசா தர்மேந்திரா
கல்விக்குழு இணைப்பாளர்கள்:
சண்முகநாதன் தயாளன், யோகராசா ஜெயந்தன், நந்தகுமார் சுபேசன்,
விளையாட்டுக்குழு இணைப்பாளர்கள்:
ராசகிளி நிமல், வேலுப்பிள்ளை ஜெகநாதன், தர்மகுலசிங்கம் ராகவன், பரசுராமன் சாந்தரூபன்

03.05.2025 அறிக்கை இல.002

அனுப்புனர்
தாய் நிலம் எங்கள் கிராமம்
பிரித்தானியா

தாய்நிலம் எங்கள் கிராமம் அனைத்துச்சொந்தங்களுக்கும் வணக்கம். கடந்த மாதம் எங்கள் நிர்வாகத்திலும் செயற்குழுவிலும் இருந்து குகநேசன் (உபபொருளாளர்) மற்றும் ஜெகநாதன் (விளையாட்டுக்குழு) ஆகியோர் வெளியேறியிருந்தனர் அவர்களின் இடத்திற்கு பதிலாக ஏற்கனவே நிர்வாக குழுவின் உறுப்பினராக இருவரை இணைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments