தாய்நிலம் எங்கள் கிராமம் பிரித்தானியா புத்தாண்டும் புதுநிமிர்வும் பொங்கல் விழா
கடந்த 17.01.2026 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் எமது கிராமத்து உறவுகள் கலந்துகொண்டு நிகழ்வுகளை சிறப்பித்துள்ளதுடன் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அன்புச்சொந்தங்களுக்கும், பாடல்கள் பாடி சிறப்பித்த பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மற்றும் பாடல்களுக்கு நடனமாடியவர்கள், தேவாரம், கவிதை, கீபோட் மூலம் பாடல்கள், நாடக கலைஞர்கள், எழத்தாளர், நிகழ்ச்சிகளை தொகுத்தளித்த நிகழ்ச்சி குழுவினர், மண்டப ஒழுங்கு மற்றும் மேடை அலங்காரம், பொங்கல் பந்தல் அலங்காரம், மற்றும் சாப்பாடு, சிற்றுண்டி, பொங்கல் குளிர்பானங்கள், தேநீர், புகைப்படம் மற்றும் வீடியோ ஒலியமைப்பு, குமுகப்பணி கௌரவிப்புக்கான பின்தளப்பணிகளான வீடியோ பதிவுகள், வாழ்த்துமடல், கேடயம் போன்றவற்றை ஒழுங்கு செய்தவர்கள், மாணவர்கள், அங்கத்தவர்களுக்கு பரிசில்கள் மற்றும் அதிஸ்டலாபச்சீட்டிழுப்பு போன்றவற்றிற்கு உதவி புரிந்தவர்கள் அத்தோடு தாயகம், புலம்பெயர் தேசங்கங்களில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்த தாய்நிலம் கல்விக்கூட மாணவர்களுக்கும் தாய்நிலம் புலம்பெயர் நிர்வாகிகளுக்கும் பெற்றோர்களுக்கும் உட்பட அனைத்து வழிகளிலும் உதவிகள் புரிந்த எங்கள் அன்புள்ளங்கள் அனைவருக்கும் தாய் நிலம் எங்கள் கிராமம் பிரித்தானியா நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்
நன்றி














































































































































































வாழ்த்துக்கள் ஊர் வாழ நம் உறவுகள் வாழ தாய் நிலம் சிறக்க உறுதுணையாக ஒன்றாக நிற்போம்